• Sep 20 2024

'மாமன்னன்' படத்தில் சிறுவயது அதிவீரனாக நடித்த சூர்யா... 'லேப்டாப்' வழங்கி கௌரவித்த படக்குழு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'மாமன்னன்'. இப்படத்தில் வடிவேலு மிகமுக்கியமான ரோலில் நடித்துள்ளார். 


அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வடிவேலுவும் மாமன்னன் படத்தில் ஒரு ஹீரோதானாம். பொதுவாக நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு முதல்முறையாக இப்படத்தின் மூலமாக அழுத்தமான ரோலில் நடிப்பதனால் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பு கொடுக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் 'மாமன்னன்' படத்தில் சிறுவயது அதிவீரனாக சிறந்ததோர் நடிப்பை வெளிப்படுத்திய சூர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்திய படக்குழு அவரின் கல்விக்கு உதவும் வகையில் லேப்டாப் வழங்கி கௌரவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது சூர்யாவின் கல்விக்கும், வளர்ச்சிக்கும் என்றும் துணை நிற்போம் எனவும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.



Advertisement

Advertisement