• Sep 20 2024

சூர்யாவின் 'கங்குவா' கிளிம்ஸ் வீடியோ செய்த பெரும் சாதனை..! என்னன்னு பாருங்க..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், பாலிவுட்டில் நடிகை திஷா பதானி, மிருணால் தாக்கூர், யோகி பாபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

சூர்யா 42 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிக்கும் பொருத்தமான ஒரு பெயரை தேர்ந்து எடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு,படக்குழு கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்த  கிளிம்ஸ் வீடியோவில் நெஞ்சில் கிடக்கும் புலி நகத்துடன் குதித்து வந்து நலமா என கேட்கும் வீடியோவைப்பார்த்து மிரண்டு போன சூர்யாவின் ரசிகர்கள் , அந்த வீடியோவை ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement