• Sep 20 2024

சூர்யாவின் 'கங்குவா' படத்தின் டீசர் கிலிம்ப்ஸ் வீடியோ அப்டேட்... மாஸாக வெளிவந்த அறிவிப்பு இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்டவகையில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. 


மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஆரம்பகட்டமாக சூர்யா நடிக்கும் வரலாற்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 


இந்நிலையில் தற்போது 'கங்குவா' படத்தின் டீசர் கிலிம்ப்ஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இப்படத்தின் உடைய கிலிம்ப்ஸ் வீடியோ வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement