• Sep 20 2024

ஆறு வேடங்களில் அட்டகாசமாக அசத்தும் சூர்யாவின் கங்குவா! இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் ஆரம்பம். எங்கு தெரியுமா? வெளியானது புதிய அப்டேட்!

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

சிறுத்தை படத்தின் இயக்குனரான  சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஹீரோயினாக ஹிந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படம் ஒரு பீரியாடிக் படமாகும்.



வரலாற்றில் நடக்கும் விஷயங்களே இந்த படத்தின் கதைக்களமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் கதையை ஆதி நாராயணன் எழுதியிருக்கிறார். இப்படத்திற்கு  இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதுவரை பார்த்திடாத வகையில், நடிகர் சூர்யா கங்குவா படத்தில் ஆறு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தில், யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், பாபி டியால், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


கங்குவா படத்தின் காட்சிகள் பல நாடுகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், கங்குவாவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இன்று தொடங்கியிருக்கும் கங்குவா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பினை  இம் மாத இறுதி வரை திட்டமிட்டிருக்கிறார்களாம். 

கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை விரைவாக நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குனர் சிறுத்தை சிவா. அனைத்து வேலைகளையும் முடித்து அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும்,  கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement