'உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற சீரியல் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுத்த யுவினா பார்த்தவி, இதை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
அந்த வகையில் இவர் முதல் முதலில் அறிமுகமான, 'மதகஜ ராஜா' திரைப்படம் வெளியாகாமல் போகவே, கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடித்த 'இவன் வேறு மாதிரி' படம் இவரது அறிமுக படமாக இருந்தது.
மேலுமு் முதல் படத்திலேயே இவரது கியூட் நடிப்பு மற்றும் அழகு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அந்த வகையில், வீரம், மஞ்சப்பை, அதிதி, அரண்மனை 2, என அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததது. குறிப்பாக இவர் சூர்யாவுக்கு மகளாக நடித்த 'மாஸ்' படத்தில் இவரது நடிப்பு அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.
சுமார் 15-திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள யுவினா, தமிழை தொடர்ந்து தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
அத்தோடு இவருடைய அம்மா ஒரு மாடல் என்பதால், இவருக்கு சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு எளிதாகவே கிடைத்தது. அதே போல் தற்போது பல்வேறு விளம்பரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் யுவினா.
கடைசியாக இவர் நடிப்பில், கடந்த 2018 ஆம் ஆண்டு சர்க்கார் படம் ரிலீஸ் ஆகிய நிலையில், தற்போது படிப்பிலும், அவ்வப்போது சில ரியாலிட்டி ஷோக்களிலும் தன்னுடைய அம்மாவுடன் கலந்து கொண்டார்.
எனினும் தற்போது பார்ப்பதற்கு, ஹீரோயின் லுக்கில் இருக்கும் யுவினா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் அப்படி இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் வேறு லெவலுக்கு நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
பிற செய்திகள்
- விருமன் படம் மூலம் பாடகியாகவும் அறிமுகமான இயக்குநர் ஷங்கரின் மகள்..!
- புஷ்பா 2 இல் வில்லியாக களமிறங்கும் தேசிய விருது பெற்ற நடிகை…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி-மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
- கேரவனில் நடிகர்கள் நடந்து கொள்ளும் விதம்: தயாரிப்பாளர் கே. ராஜனின் பரபரப்பு பேச்சு.!
- 6 நாள் முடிவில் தி லெஜண்ட் திரைப்படத்தின் வசூல் விபரம்…எத்தனை கோடி தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!