• Sep 20 2024

பிறந்தநாள் அன்று சூர்யா வெளியிட்ட அறிக்கை-என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சூர்யா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் சூர்யா.இவர் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

பெரிய எதிர்பார்பிற்கிடையே நேரடியாக OTT-யில் வெளியான சூரரை போற்று, மக்களிடையே அமோக வரவேற்ப்பை பெற்றது.

அத்தோடு சிறந்த விமர்சனங்களை பெற்ற இப்படத்தில் நடிகர் சூர்யா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்தியளவில் வெளியான சிறந்த படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே நேற்று 68-வது தேசிய விருது குறித்த பட்டியலை அறிவித்தனர். அதில் சூரரை போற்று சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம், திரைக்கதை, பின்னணி இசை என 5 விருதுகளை குவித்தது.

இந்நிலையில் சூர்யாவிற்கும் அவரது படக்குழுவினருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அதற்கு நன்றி கூறும் விதமாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement