• Nov 10 2024

வெள்ளிவிழாக் காணும் நடிகர் சரத்குமாரின் சூரியவம்சம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், நடிகர் சரத்குமாரின் நடிப்பில் 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படமே சூரிய வம்சம். மேலும் இப்படத்தில் தேவயானி, ராதிகா, மணிவண்ணன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும் இவர்களுடன் இணைந்து மற்றும் பலரும் நடித்துள்ளனர். அத்தோடு சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார்.

அதாவது இத்திரைப்படத்தில் சரத்குமார் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பதோடு தந்தை என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ராதிகாவும், மகன் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தேவயானியும் நடித்துள்ளனர். அத்தோடு ஆனந்தராஜ் வில்லன் வேடத்திலும், மணிவண்ணன் மற்றும் ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் நகைச்சுவைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 25 வருடத்தை நிறைவு செய்துள்ளது. 90 காலப்பகுதியில் இப்படம் வெளியாகி இருந்தாலும் இன்றும் பலரின் மனம் கவர் படங்களில் ஒன்றாக இப்படம் அமைந்திருக்கின்றது. முன்னேறத் துடிக்கும் இளஞர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும் இப்படம் அமைந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது "காலம் எவ்வளவு வேகமாக சுத்துது பார்த்தீங்களா?" என்ற தேவயானியின் வார்த்தை இன்றுமே நம்மில் பலரால் மறக்கமுடியவில்லை.

அது மட்டுமல்லாது அப்படத்தினுடைய கதையும் நம்மால் மறக்க முடியாது. அதாவது மதிப்புமிக்க ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த சரத்குமார் அதிகம் படிக்காதவர். சரத்குமார் திருமணம் செய்ய விரும்பிய பெண் சரத்குமார் படிக்காதவர் என்பதனால் அவரைத் திருமணம் செய்யவில்லை. இந்நிலையில் சரத்குமாரின் சகோதரிக்கும் தேவயானியின் சகோதரருக்கும் திருமணம் நடைபெறுகின்றது. சரத்குமார் குடும்பத்தில் அனைவரும் அவரை ஒதுக்குவது தெரிந்து சரத்குமார் மீது காதல் கொள்கின்றார் தேவயானி.

வீட்டிலுள்ளோரின் சம்மதம் இல்லாமலே இருவரும் திருமணம் செய்து கொள்கின்றார்கள். இந்நிலையாக இருவரும் தனியாக வீடு ஒன்று எடுத்து தங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கின்றார். தேவயானி படித்து முடித்து கலெக்டராக வருகின்றார். அதுமட்டுமல்லாது சரத்குமாரும் சின்ன சின்னதாக தொழில் செய்து முன்னேறி தொழிலதிபராகின்றார். இவ்வாறாக மறக்க முடியாத சம்பவங்கள் பலவற்றை கதையாகக் கொண்டு அமைந்ததே இந்த திரைப்படம்.

அது மட்டுமல்லாது எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் உருவான "நட்சத்திர ஜன்னலில், சலக்கு சலக்கு, ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ" ஆகிய பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலாதவை. இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 25-ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழாக் கொண்டாடுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement