• Sep 21 2024

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றும் ட்ரீட் - இத்தனை அப்டேட்டா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் சூர்யா தற்பொழுது இயக்குநர் பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது கன்னியாகுமாரியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப்படப்பிடிப்பானது கோவாவில் ஜுலை மாதம் ஆரம்பிக்கவுள்ளது.

இது தவிர வெற்றிமாறனுடன் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கும் படம், விக்ரம் 3, சிறுத்தை சிவா இயக்கும் படம், அயலான் டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் படம் எனப் பல படங்களில் கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் வாடிவாசல் படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி எடுத்து வருகிறார்

இப்படி பிஸியான நிலையில் தனது மகள் 10ம் வகுப்பில் சித்தியடைந்ததை அடுத்து குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அத்தோடு வாடிவாசல் படத்தின் ஃபிரிமினரி போட்டோஷுட் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஷுட்டிங்கை துவக்க போவதாக கூறப்படுகிறது.

மேலும் சூர்யா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் மற்றும் ட்ரீட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுலை மாதத்தில் வாடிவாசல் படத்தின் முதல் க்ளிம்ப்சை வெளியிட போகிறாரா்களாம். வாடிவாசல் டீம் மட்டுமல்ல விக்ரம் 3, சூர்யா 41 படக்குழுக்களும் சூர்யா பிறந்தநாளன்று அப்டேட் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அன்று கொண்டாட்டம் வேற லெவலில் இருக்கும் என்றே ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement