• Sep 20 2024

அனுஷ்கா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரெண்டு என்ற படம் மூலம் அறிமுகமானவர், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிம்பு என டாப் ஸ்டார்களுடன் நடித்து கோலிவுட் கனவு கன்னியாக வலம் வந்தார். 

ராஜமௌவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்தார். பாகுபலி திரைப்படம் அனுஷ்காவுக்கு விருதுகளை வாங்கி தந்தது. அதுமட்டுமில்லை இந்த படத்திற்கு பிறகு அனுஷ்காவுக்கும் பிரபாஸூக்கும் காதல் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.


மேலும் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன.தற்போது இவர் இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார். 

மேலும், ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனுஷ்கா நடித்து வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, ஆகஸ்ட் 4-ஆம் தேதி 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவு பெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி மீண்டும் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement