• Sep 21 2024

சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்- டபுள் குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் சூர்யா. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது தற்பொழுது நெக்கட்டிவ் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக வெளியாகிய விக்ரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் கதாநாயகனாக நடித்த சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவம் படங்கள் வெற்றி பெற்றது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இதையடுத்து, சூர்யா- பாலா இணைந்துள்ள சூர்யா41 படம் நடந்து வரும் நிலையில் இதனால், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போயுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில்,வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, வாடிவாசல் படத்தில் இருந்து ஜிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் ஒரு தகவல் வெளியாகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement