ஷு தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் ஐஸ்வர்யா கிருஷ்ணன்.கடந்த ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியினை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவர் கடுமையாள போட்டியாளராகவும் வலம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுத்து வருகிறார்.துணிச்சல் மிக்க பெண்ணான ஐஸ்வர்யா கிருஷ்ணன் பல சினிமா பிரபலங்களுக்கும் ஃபிட்னஸ் டிரைனராக பயிற்சி அளித்து வருகின்றார்.இந்நிலையில், ஐஸ்வர்யா தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ரெஸ்ட்ரண்ட் ஒன்றில் இருவரும் மிகவும் நெருக்கமாக தோள் மீது கையெல்லாம் போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் தனது பாய் ஃப்ரெடின் பிறந்தநாளை முன்னிட்டே அவரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
இதனால் ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருவதோடு திருமணம் எப்போது எனக் கேட்டு வருகின்றனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!