• Sep 19 2024

சூர்யா பிறந்த நாளில் டபுள் விருந்து.. ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மேக்கிங் வீடியோ.. மாஸ் தகவல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் சூர்யாவின் பிறந்தநாள் வர இருக்கும் நிலையில் அன்றைய தினம் இரண்டு படங்களின் அப்டேட் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்களுக்கு அன்றைய தினம் டபுள் விருந்து என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 வது படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் அட்டகாசமான சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், ’துப்பாக்கி’ ’ஜவான்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் இயக்குனர் கீசா காம்பக்டீ  என்பவர் தான் இந்த படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய ஒரு பாடலும் அந்தமானில் படமாக்கப்பட இருப்பதாகவும் அந்தமானில் மட்டும் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் இந்த மாதத்தின் இறுதியில் ’சூர்யா 44’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அடுத்த மாதம் ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் வருவதால் அன்றைய தினம் பர்ஸ்ட் லுக் வீடியோ மற்றும் ’கங்குவா’ படத்தின் மேக்கிங் வீடியோ ஆகியவற்றை வெளியிட இரண்டு படக்குழுவினர்களும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் அடுத்த மாதம் வரும் சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement