• Sep 20 2024

'சூர்யா 44' படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்? நாயகி உட்பட முக்கிய நடிகர்களின் பட்டியல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44'  என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் அந்தமான் தீவில் நடைபெற உள்ளதாக வெளியான செய்தியையும் பார்த்தோம். 

இந்த நிலையில் சூர்யா உள்பட படக்குழுவினர் அந்தமான் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்கள் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



அதேபோல் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் ஜெயராம் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு முக்கிய கேரக்டரில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் கருணாகரன் காமெடி கேரக்டரில் நடிக்க உள்ளார்.

 அந்த வகையில் இன்று நான்கு நட்சத்திரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மற்ற நட்சத்திரங்களின் பெயர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement