• Sep 20 2024

சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக சூர்யாவும் மகாவும் செய்யும் பரிகாரம்- சுவாரஸியமான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் ஆஹா கல்யாணம். இந்த சீரியல் காட்சோரா என்னும் பெங்காலி தொடரின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும். இதில் முக்கிய கதாபாத்திரமாக மௌனிகா, விக்ரம் ஸ்ரீ, அக்ஷய கந்தமுதன், காயத்ரி ஸ்ரீ ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கச்சி கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கின்றார். இவ்வாறு வசதியான இடத்தில் அவர் திருமணம் செய்து கொள்வதால் மாப்பிள்ளை வீட்டில் அந்தப் பெண் என்னெனன்ன கஷ்டங்களை அனுபவிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சூர்யாவும் மகாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக வீட்டில் ஒரு பரிகாரம் செய்யச் சொல்கின்றனர். இந்தப் பரிகாரத்தில்  சூர்யாவினது வேட்டியும் மகாவின் சேலையின் முந்தானையும் முடியப்பட்டு இருவரும் மௌன விரதம் இருக்க வேண்டும்.

இதனால் இருவரும் இந்த பரிகாரத்தைச் செய்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement