இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42 வது படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவூட் நடிகை திஷா பதானி தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா மற்றும் ஆனந்த்ராஜ் ஆகிய நான்கு காமெடி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இன்றைய படப்பிடிப்பிலும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் காமெடி காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கிட்டத்தட்ட ஒரு முழு நீள காமெடி படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது .ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் ரசிகர்களை திருப்திபடுத்த ஆக்ஷன் காட்சிகள் ரொமான்ஸ் காட்சிகளும் உண்டு என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. மூன்று கேரக்டரில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அதற்கான கெட்டப் சேஞ்ஜிற்கு தாமதமாகும் என்பதால் ஷூட்டிங்கும் தாமதமாகுமாம். இதேபோல் சூர்யாவும் தன் பங்கிற்கு படத்தினை சீக்கிரமாக முடிக்க கண்டீஷன் போட்டிருக்கிறாராம்.
மேலும் பெரிய நடிகர்கள் இதைதான் கூறுவார்கள் என்று தெரிந்தும் கொஞ்சம் பொறுத்தாகத்தான் வேண்டும் என்று ஓகே கூறியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. இப்படம் பல மொழிகளில் உருவாகி பான் இந்தியா படமாகவும் வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
Listen News!