தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களைத் தேர்ந்து எடுத்து நடிப்பதில் கை தேர்ந்தவர் நடிகர் விஜய்சேதுபதி. வெள்ளித்திரையில் ஜொலிப்பதற்கு முதல் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் என்பதும் முக்கியமாகும்.
அத்தோடு இவர் ஹீரோ என்ற வட்டத்திற்குள் சிக்கிவிடாமால் எந்த வித கதாபாத்திரமாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பவர். ஆனால் சமீபகாலமாக இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இவர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய திரைப்படம் தான் காத்துவாக்கில ரெண்டு காதல்.
முக்கோண காதல் கதையாக வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. விஜய் சேதுபதி படங்களில் வெளியான முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அமைந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் USA வில் வெளியான இரண்டு நாட்களில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அத்தோடு கடந்த மார்ச் மாதம் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வசூலை விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் முந்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
- ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…!
- பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி…சந்தியா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!
- ஏ .ஆர்.ரகுமான் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!