• Sep 21 2024

விக்ரம் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் வெறித்தனமான லுக் -சூப்பர் அப்டேட்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா ரசிகர்களை தனது படங்கள் மூலம் நிறைய கற்றுக் கொடுத்தவர்.புது புது விஷயங்களை அந்த காலத்தில் இருந்தே தனது படங்களில் வைத்து வந்தார்.மேலும் அவர் ஒரு பல்கலைக்கழம் என பலர் கூற நாம் கேட்டிருப்போம்.

எனினும் இதனை தொடர்ந்து படங்கள் நடித்து வந்த கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இயக்கிய படம் விஸ்வரூபம். இரண்டு பாகமும் வெளியாகி மாஸ் காட்டியது.மேலும் 2018 தான் அவரது நடிப்பில் வெளிவந்த கடைசி படம். அதன்பிறகு கமல்ஹாசன் அரசியல், பிக்பாஸ் என பிஸியாகவே இருந்துவிட்டார்.

இடையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டார், ஆனால் படம் பிரச்சனையால் பாதியில் நிற்கிறது. அத்தோடு இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூன் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது.தற்போது முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் ரசிகர்கள் முதல் நாள் டிக்கெட்டுகளை வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் பல்வேறு ஆச்சர்யம் அளிக்கும் விஷயங்கள் உள்ளது என லோகேஷ் சொல்லி வருகிறார்.

எனினும் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார் என்பது கூடுதல் சந்தோஷம்.

இதனிடையே தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆம், வெறித்தனமான லுக்கில் சூர்யாவின் பாதி முகத்துடன் அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதோ அந்த போஸ்டர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement