நடிகர் விஜயகாந்த் தமிழில் 150 படங்களுக்கு மேல் நடித்தவர். அதிரடி ஆக்ஷன் படங்களில் மட்டுமில்லாமல் அழுத்தமான கதைக்களங்களிலும் நடித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் விஜயகாந்த்.
அரசியலிலும் திறம்பட செயல்பட்ட விஜயகாந்த், தேமுதிக கட்சியை நிறுவி அதன்மூலம் பல நலப்பணிகளை செய்தவர். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவிலும் அரசியலில் இருந்தும் விலகியிருந்த விஜயகாந்த் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு நலம்பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதமர், முதலமைச்சர் என பல்வேறு தரப்பினரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் விஜயகாந்துடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை…
யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை..
கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! pic.twitter.com/PHeqHNG3uk
Listen News!