'பெமினா மிஸ் இந்தியா', 'பிரபஞ்ச அழகி' போன்ற பட்டங்களை வென்று மக்கள் மத்தியில் பிரபலமாகி ஹிந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஒருவரே நடிகை சுஷ்மிதா சென். இவ்வாறான பட்டங்கள் பலவற்றை வென்று சினிமாவிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கின்றார்.
சினிமாவைப் பொறுத்தவரையில் அழகானவர்களை விட்டு வைப்பதில்லை. அதேபோன்றே சுஷ்மிதாவையும் தம் பக்கம் நோக்கி ஹீரோயினாக இழுத்துக் கொண்டனர். அன்று தொடக்கம் இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வந்த இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்ட மறப்பதில்லை.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் முன்னாள் ஐ.பி.எல் தலைவரான லலித் மோடியுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தமை அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் சுஷ்மிதா சென் ஐ சமூக வலைத்தளங்களின் ஊடாக விமர்சித்து வந்திருந்தனர்.
இவ்வாறாக தன்னையும், லலித் மோடியையும் பற்றி அவதூறாகப் பேசியவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை சுஷ்மிதா சென் இன்ஸ்டா பதிவு ஒன்றினை இட்டிருக்கின்றார். அதில் அவர் "எனது மனச்சாட்சி எப்போது நடுநிலையானது. இயற்கையானது எவ்வாறு அனைத்து படைப்புகளையும் ஒன்றிணைத்து ஒற்றுமையை அனுபவிக்கிறது என்பதை நான் விரும்புகிறேன். அந்த சமநிலையை உடைக்கும் போது நாம் எவ்வளவு பிளவுபடுகிறோம். நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு பரிதாபமாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் மாறிவருகிறது என்பதைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது. அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் அறியாமையால் மலிவான மற்றும் சில சமயங்களில் வேடிக்கையான விமர்சனைகளை முன்வைக்கின்றனர்" எனக் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் 'கோல்ட் டிக்கர்' எல்லா வழிகளிலும் பணசம்பாதிப்பவர்கள். நான் தங்கத்தை விட ஆழமாக தோண்டுகிறேன். மேலும் நான் எப்போதும் வைரங்களை விரும்புவேன். அதை நானே வாங்கிக்கொள்கிறேன். எனது நலம் விரும்பிகளும் அன்பானவர்களும் முழு மனதுடன் தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்க நான் விரும்புகிறேன். தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் சுஷ் முற்றிலும் நலமாக இருக்கிறார். காரணம் நான் ஒருபோதும் கைதட்டல்களின் ஒளியில் வாழ்ந்ததில்லை. நான் சூரியன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுஷ்மிதா சென்னின் இந்தப் பதிவினை பார்த்த ரசிகர்கள் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளீர்கள் எனக் கூறி வருகின்றார்கள்.
பிற செய்திகள்
- சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…வைரலாகும் வீடியோ…!
- நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் அமீர்கான் நடிக்கும் படம்…வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்….யார் தெரியுமா?…!
- அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போன்று நடிக்கும் இளம் பெண்… வெளியான வீடியோ…நம்பவே முடியலப்பா என்னமா நடிக்கிறாங்க …!
- கையில் சுத்தியலுடன் கொலை வெறியில் திரியும் விஷ்ணு விஷால்… வெளியான வீடியோ…கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!
- ரம்யா பாண்டியனின் கவர்ச்சிக்கு கிடைத்த பலன்…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!