தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
அத்தோடு இந்தத் திரைப்படம் ஜுன் மாதம் 3ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா வருகிறார் என்பதை இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். ஆனால் இதற்கு முன்னரே சூர்யா ரசிகர்கள் இதனை கண்டு பிடித்து விட்டனர்.
இந்த நிலையில் சூர்யா பற்றி லோகேஷ் மேலும் கூறியதாவது,
நான் சூர்யா சாரிடம் விக்ரம் படத்தின் கதையை சொன்னேன். அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்பதில் சந்தேகமாக இருந்தது. ஆனால் கதையை கேட்டதுமே நான் நடிக்கிறேன் என்று கூறி எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
மேலும் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடித்துக் கொடுத்தார் என்றார். அத்தோடு கிளைமாக்ஸில் வந்தாலும் சூர்யா வரும் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம். இந்நிலையில் சூர்யாவுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணப் போவதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!