இந்தியத் திரையுலகில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை டாப்ஸி. இவரது அழகிற்கும், நடிப்பிற்கும், திறமைக்கும் என்றே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உண்டு.
திரையுலகத்தில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இன்றுவரை ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார். கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் அறிமுகமாகி அங்கும் கொடி கட்டிப் பறந்து வருகின்றார். அதுமட்டுமல்லாது தற்போது ப்ளர், வோ லட்கி ஹே கஹான், சபாஷ் மிது, தோபாரா,துன்கி, தட்கா ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கின்றார்.
இப்படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் தூண்டிய படமாக 'சபாஷ் மீது' அமைந்திருக்கின்றது. இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் முன்னாள் தலைவியான மிதாலி ராஜ்ஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு அமைந்திருக்கின்றது.
இவ்வளவு காலமும் இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் கதாநாயகியாக இவரை பிரதிபலித்துக் காட்டிய நிலையில் இப்படம் ஆனது இவரை வீர மங்கையாக உலகிற்கு காட்டுகின்றது.
இவ்வாறாக தொடர்ந்து படங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வரும் டாப்ஸி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வமாக இருக்கும் ஒருவர். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சேலை அணிந்து நடத்திய புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகின்றன.
பிற செய்திகள்
- கவர்ச்சியில் களை கட்டும் பிக்பாஸ் மதுமிதா…வாயடைத்துப் போன ரசிகர்கள்
- நீல நிற சேலையில் நீங்கா இடம்பிடித்த நடிகை அனுபமா…மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்
- “நன்றி கமல் சார், நன்றி இமான் சார்”….மனமுருகச் செய்த திருமூர்த்தியின் டிவிட்டர் பதிவு
- கிரிக்கெட் மட்டையை கையில் கூட தொடாமல் வளர்ந்தவள் நான்; நடிகை டாப்ஸி
- தனுஷ்-அனிருத் கூட்டணியின் “மேகம் கருக்காதா” பாடல் வெளியீடு…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!