• Nov 19 2024

கரண் ஜோகர் பற்றி ஓப்பனாகப் பேசிய டாப்ஸி...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ஷோக்களில் ஒன்று 'காபி வித் கரண்'. இந்நிகழ்ச்சியானது 6 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்து விட்ட நிலையில் அதன் 7ம் சீசன் சமீபத்தில் தொடங்கியது. அதில் சமந்தா, ஜான்வி கபூர், அக்ஷய், அமீர் கான் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் இதுவரை வந்த எபிசோடுகளில் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து சமீபத்தில் கத்ரீனா கைப் வெளியிட்டு இருந்த இன்ஸ்டா பதிவில் தான் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றதை மறைமுகமாக உறுதி செய்து இருந்தார். மேலும் அந்த ஷோவில் கரண் ஜோகர் கத்ரீனாவின் செ*ஸ் லைப் பற்றியும் கேள்விகள் கேட்டதாகவும், அதற்கு அவரும் தயக்கமின்றி பதில்கள் சொன்னதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

கத்ரீனா கைப்புக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆகும் நிலையில் இப்படி எல்லாம் கரண் ஜோகர் அந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்டது பரபரப்பாக பேசப்பட்டு வந்திருந்தது.

இந்நிலையில் நடிகை டாப்ஸி பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகை டாப்ஸியிடம் "உங்களுக்கு ஏன் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்க அழைப்பு வரவில்லை" எனக் கேட்டிருக்கின்றார்கள். அதற்கு அவர் கொஞ்சமும் தயக்கமின்றி "My sex life is not interesting"என பதில் அளித்து இருக்கிறார்.

அதாவது என்னுடைய செ*ஸ் லைப் சுவாரஸ்யமானதில்லை எனக் கூறியிருக்கின்றார். எனவே இவரின் பதிலை வைத்துப் பார்க்கும் பொது காபி வித் கரண் ஷோவில் கரண் ஜோகர் அதிகளவில் செக*ஸ் பற்றிய விடயங்களையே கேட்டு வருவது புரிகின்றது. 

இவ்வாறாக டாப்ஸி கரண் ஜோககர் பற்றி ஓப்பனாக பேசி இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் இவர் கூறிய இந்தப் பதிலானது அதிகளவில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement