• Nov 17 2024

பத்து வயது இளமையாக தோன்றுவதற்காக எடையை குறைந்த தனுஷ்-எப்படி இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ். அவர் நடிகராக மட்டுமன்றி பின்னணி பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவை கலக்கி கொண்டுள்ளார்.

45க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ் வணிக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தன் இயல்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த இவர் தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

இந்நிலையில் செல்வராகவனின் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.மேலும் அவரது ஒரு கெட்அப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனது மற்றுமொரு படமான 'திருச்சிற்றம்பலம்' படத்தில், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று கதாநாயகிகளுடன் தனுஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தனுஷின் படம் ரசிகர்களை ஆழ்த்தியுள்ளது. ஏறக்குறைய பள்ளிப் பையனைப்போல பத்து வயது இளமையாக தோன்றுவதற்காக எடையை குறைந்துள்ள தனுஷின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement