• Sep 20 2024

'தல' அஜித் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம்… பள்ளி சீருடையில் ரொம்ப அழகாக இருக்காரே… வெளியான புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ரசிகர்களால் பகிரப்பட்டு வரும் ஒரு விடயமாக திரைப்பிரபலங்களில் சிறு வயதுப் புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன. பொதுவாகவே நட்சத்திரங்களின் சாதாரண புகைப்படங்கள் வெளியானால் கூடி அதனை ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள். இந்த நேரத்தில் அவர்களின் சிறுவயது புகைப்படம் அல்லது அன்சீன் புகைப்படங்கள் வெளியானால் அதனை விட்டு வைப்பார்களா? தமது வலைத்தளப் பக்கங்களிலும் பகிரத் தொடங்கி விடுவார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் கூட சமந்தா, காஜல் அகர்வால், சினேகா எனப் பலரினதும் சிறுவயதுப் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதனையடுத்து தளபதி விஜய் சிறுவயதில் அவரின் தந்தை S.A.சந்திரசேகர் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இருக்கும் அரிதான புகைப்படம் வெளியாகி வைரலானமை நம் அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மற்றுமொரு உச்ச நட்சத்திரத்திரத்தின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதாவது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் பெரிய ரசிகர்களை வைத்துள்ள இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து மாபெரும் வெற்றியடைந்து வருகின்றன.

அப்படியான நம்ம தல அஜித் தமிழில் முதல் முறையாக நடித்த திரைப்படம் 'என் வீடு என் கணவர்'. இப்படம் 1990-ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்படத்தில் தான் அஜித் பள்ளி சீருடையில் முதல்முறையாக குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இப்புகைப்படம் ஆனது தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement