• Sep 20 2024

ஏர்போட்டில் ரசிகருடன் சேர்ந்து காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் நான்காவது படம் இது.

பான் இந்தியா வெளியீடாக தயாராகியுள்ள ஜெயிலரில் மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார், சுனில் என பிற மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.கதாநாயகியாக தமன்னா நடிக்க, முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


இந்நிலையில் கடந்த ஜூன் 6ம் தேதி மாலை ஜெயிலர் படத்தில் இருந்து ‘காவாலா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. அந்த பாடலுக்கு யூடியூபில் 23 மில்லியன் வியூஸ் கிடைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அது மட்டுமல்ல spotify-யில் இந்த பாடல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது.

இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தமன்னாவும் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.அந்த வகையில் ஏர்போட்டில் ரசிகரின் விருப்பத்திற்கிணங்க அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றனது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement