• Sep 20 2024

பானை செய்யும் தொழில் முயற்சியில் இறங்கிய தமன்னா- சூப்பராக டிசைன் பண்ணுகின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேடி என்னும் திரைப்படத்தில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகமாகியவர் தான் தமன்னா. இதனைத் தொடர்ந்து வியாபாரி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதனைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் இவருக்கு குவியத் தொடங்கியதை அடுத்து சூர்யா, கார்த்தி, பரத், தனுஷ், விஜய் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டு டாப் 10க்கு வந்தவர்.

இவருடைய கெரியரில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது பாகுபலி தான். இப்படத்தில் கவர்ச்சியாகவும் கத்தியுடன் வித்தை காட்டும் பெண்ணாகவும் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகின்றார்.தற்போது இவர் நடிப்பில் பாப்லி பவுன்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் வரும் செப்டம்பர் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக திரையிடப்பட உள்ளது.

இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அதில் தமன்னா மண் பாத்திரங்களை உருவாக்கி வருகிறார். தமன்னா ஒரு சாதாரண கருப்பு டேங்க் டாப் மற்றும் ஸ்வெட் பேண்ட்டை அணிந்துள்ளார்,

குயவர் தமன்னாவுக்கு ஒரு சரியான பானையை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார். மேலும் அதில் டிசைன்களைச் சேர்த்து, பானையை கச்சிதமாகத் தோற்றமளிக்க செய்கிறார் தமன்னா..அந்த வீடியோவுடன் "மிஸ் பி மற்றும் அவரது இடைவேளை நேரம்" என்று சேர்த்து "#சுயபராமரிப்பு , #கற்றல் செய்தி திறன்கள் , #இருத்தல்" என் கேஷ் டேக் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement