• Nov 17 2024

கிழிந்த உடையில் ஆடிய தமன்னா... புதிய ஸ்கர்ட்டை கொண்டு வந்த கூல் சுரேஷ்! பெரிய மனசு சார் உங்களுக்கு...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்ட் நடித்த படம் தான் ஜெயிலர். அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர்.


சர்வதேச அளவில் இன்றைய தினம் ஜெயிலர் படம் ரிலீசாகியுள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இந்தப் படம் உலகளவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 


முதலில் இந்தப் படத்தின் காவாலா பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் பாடலில் தமன்னா, ரஜினி ஆட்டம் போட்டிருந்தனர். இந்தப் பாடலில் குறிப்பாக தமன்னாவின் ஆட்டம் சர்வதேச அளவில் ரீச்சாகி செம மாஸ் காட்டியது.


பாடலில் அவரது கெட்டப்பும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அவர் கிழிந்த ஸ்கர்ட்டுடன் நடித்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தை பார்க்கவந்த நடிகர் கூல் சுரேஷ், தான் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலை பார்க்க வந்ததாகவும் ஆனால் பாடலில் கிழிந்த உடையுடன் தமன்னா ஆடியுள்ளது தனக்கு மனவருத்ததை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தமன்னாவிற்கு புதிய கிழியாத ஸ்கர்ட்டை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.இவர் கூறிய இந்த விடயம் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement