• Nov 17 2024

விஜய் ஒரு பச்சோந்தி... வெளிப்படையாக கூறிய தமன்னா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளிப்படையாக உறுதி செய்யாமல் இருந்து வந்தனர்.

ஆனால் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இந்தக் காதல் குறித்து தமன்னா ஜாடை மாடையாக தெரிவித்திருந்தார். அதாவது இதன் மூலமாக விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தமன்னா கூறுகையில் விஜய் வர்மா ஒரு பச்சோந்தி எனத் தெரிவித்திருந்தார். அதாவது அதில் அவர் கூறுகையில் "விஜய் என்னை பாதுகாப்பாக உணர வைத்தார். அதனால் அவர் மீது பயம் என்பதே இல்லாமல் போனது. எல்லாத்தையும் ஈஸியாக்கினார் விஜய். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்" என்றார்.


மேலும் "ஒரு கதாபாத்திரத்தை அணுகும் முறையில் விஜய் ஒரு பச்சோந்தி. கதாபாத்திரத்திற்கு ஏற்ப அவர் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அவர் நடிப்பில் வெளியான அனைத்தையும் பார்த்திருக்கிறேன்" எனவும் தமன்னா அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement