தமிழ் சினிமாவில் தற்பொழுது most wanted இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் அவர்களுடைய இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. அக்டோபர் 19ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியான நிலையில், இந்திய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு-விற்குள் வந்துள்ளது, விஜய் அவர்களுடைய ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சிபடுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் பலரும் எதிர்பாராத விதத்தில் பல சுவாரசியமான காட்சிகளை அமைத்து லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
இப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் நடித்திருந்தார்.படத்தில் விஜய்யின் லியோ கேரக்டரை ஓபன் செய்யும் நபராக தோன்றி நடித்திருக்கிறார். குறிப்பாக இலையை வைத்து பீப்பி ஊதுவது போன்று அவரது இண்ட்ரோ காட்சியை லோகேஷ் அமைத்திருந்தது தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
இதனை அடுத்து மன்சூர் அலிகான் சரக்கு என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த நிலையில் இவர் அண்மையில் செய்தியயாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது,"நான் என் இடத்தை விற்று சரக்கு படத்தை எடுத்திருக்கிறேன். படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், அம்பானி, அதானி பெயரை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். அதேபோல் டெல்லி என்ற பெயரையும், ஊறுகாய் மாமி என்ற வார்த்தையையும் பயன்படுத்தக்கூடாது என்றார்கள். திருநங்கை பற்றிய நல்ல கருத்து சொல்லும் பாடலை பார்த்து இதில் கவர்ச்சி அதிகம் இருக்கிறது இதையும் எடுத்து விடுங்கள் என்றார்கள்.
ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் தமன்னா தொடையை காண்பித்து ரா ரானு அழைத்தாரே. அதைவிடவா நான் மோசமாக எடுத்தேன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அது வேற படம் சார் என்றார்கள். ஏன் தமன்னா அவ்வளவு கவர்ச்சியை காட்டும்போது சென்சாருக்கு தெரியவில்லையா அப்போது வாயை பிளந்து பார்க்கிறார்கள்.
ஜெயிலர் படத்தில் ஒரு வெங்காயமும் இல்லை. தமன்னா ஆடிய அந்தப் பாடலால்தான் படமே ஓடியது. சரக்கு படம் நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம். அதனை மக்களிடம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் சேர்க்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்ககது.
Listen News!