• Sep 20 2024

மீண்டும் 'காவாலா' பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட தமன்னா- சும்மா பட்டையைக் கிளப்பிறீங்க மேடம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


'ஜெயிலர்' படத்தின் முதல் அப்டேட்டாக 'காவாலா' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலின் அறிவிப்பை தனது ஸ்டைலில் ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டார் நெல்சன் திலீப்குமார். இந்த வீடியோ இணையத்தில் செம்மையாக வைரலானது. 

இதனையடுத்து நேற்று முன்தினம் 'காவாலா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அனிரூத்தின் இசையில், தமன்னாவின் கிளாமரான டான்ஸில் 'காவாலா' பாடல் வெளியாகியுள்ளது. 


லிரிக்கல் வீடியோவாக வெளியாகியுள்ள இந்தப்பாடலில் சில காட்சிகளில் ரஜினியின் லுக்கை பார்த்த அவரது ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். அத்துடன் 'காவாலா' பாடல் யூடியூப் டிரெண்டிங்கிலும் பல சாதனைகளை அசால்ட்டாக செய்து வருகிறது.

இப்பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து வீடிாய வெளியிட்டு வரும் நிலையில் தமன்னாவும் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement