• Nov 14 2024

விரைவில் காதலனை திருமணம் செய்யப் போகும் தமன்னா - எப்போ தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை தமன்னா கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து சுறா, அயன், சிறுத்தை, பையா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 

தற்போது ரஜினியுடன் முதல்முறையாக ஜெயிலர் படத்தில் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. சுந்தர் சியுடன் இணைந்து அரண்மனை 4 படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன. 

இந்நிலையில் தமன்னா, பாலிவுட்டின் பிரபல ஹீரோ விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் பரவின. ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் மௌனம் சாதித்த இருவரும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் வர்மாவின் அம்மாவும் இவர்களது திருமணம் குறித்து தொடர்ந்து கேட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், விரைவில விஜய் வர்மா மற்றும் தமன்னா திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே அவரது ரசிகர்கள் திருமணம் குறித்து தமன்னா கூறுவார் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement