• Sep 21 2024

பிரபல நிகழ்ச்சியில் தனது காதலனுடன் என்ட்ரி கொடுத்த தமன்னா- வைரலாகிய ரொமாண்டிக் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தமன்னா அறிமுகமான கேடி படத்தில், இரண்டாவது ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது. இதை தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர், படிக்காதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாக அயன் படத்திலும் நடித்தது இவரை முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் சேர்த்தது.

பின்னர் விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக மாறினார்.


குறிப்பாக தெலுங்கில், இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் நடித்தது, தமன்னாவை உலக அளவில் கவனிக்க வைத்தது. எனவே பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் பிசியாக மாறியுள்ளார்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இது தவிர வெப் சீரியல்களிலும் நடித்து வரும் இவர் பிரபல பாலிவூட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இரண்டு பேரும் LustStories2 பிரீமியரில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement