• Sep 20 2024

ஜெயிலர் படம் ஓடக் காரணமாக இருந்த தமன்னாவுக்கு எதுவும் இல்லையா?- புதிய புரளியைக் கிளப்பி விட்ட ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி - இயக்குநர் நெல்சன் கூட்டணி முதன்முறையாக இணைந்த  திரைப்படம் தான் ஜெயிலர். இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.பாக்ஸ் ஆபிஸிலும் சிறப்பாக வசூல் செய்துள்ளது. அத்தோடு இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக  இப்படம் வசூலித்துள்ளது. 

இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.தமன்னா நடிகை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்ததோடு காவாலயா என்னும் பாடலுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.காவாலா பாடல் வெளியான போதே, தமன்னாவுக்காக ஜெயிலர் படம் பார்க்கலாம் என ரஜினி ரசிகர்கள் கூறியிருந்தனர்.


அதே போல படமும் வெளியாகி வெற்றி பெற்றது.காவாலா பாடலின் முழுமையான வீடியோ அண்மையில் ரிலீஸானது.இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தை பார்த்துள்ளனர்.இதனை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "படம் ஓட முக்கியமான காரணம் தமன்னா. ஆனா அவங்களுக்கு காசோலையும் தரல. காரும் தரல. தர்மத்தின் வாழ்வுதனை.." என ட்ரோல் செய்துள்ளார்.


 அதாவது ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு, தலா 1.5 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக கொடுத்து அசத்தினார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். ஆனால், ஜெயிலர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்த காவாலா பாடலில் நடனமாடிய தமன்னாவை டீலில் விட்டது படக்குழு. ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement