• Nov 19 2024

தமன்னாவின் ஜாக்கெட் தெரிகிறது, அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள்; காதலர் தினத்தில் கால்களை பதிவிட்ட விஜய் வர்மாவுக்கு குவியும் கமெண்ட்ஸ்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமன்னா என்னதான் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும் அவர் முதலில் நடித்தது ஹிந்தி படத்தில் தான். அதன் பின்பு தான் அவர் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.


மேலும் தமன்னா சினிமாவுக்கு வந்து 16 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் தற்போதும் பிசியான நடிகையாக தான் இருக்கிறார். அதாவது படங்கள், வெப் சீரிஸ் என தொடர்ந்து அவர் நடித்து வரும் நிலையில் இன்றுவரை அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்நிலையில் சமீபகாலமாக தமன்னாவின் காதல் விவகாரம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது பாலிவுட் பட நடிகர் விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிப்பதாக பேசப்பட்டு வந்தது. அந்தவகையில் ஒரு பட நிகழ்ச்சியில் தான் விஜய் வர்மாவும், தமன்னாவும் முதல் முறையாக ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள். அதன் பிறகு கோவாவில் வேலை செய்யும்போது அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 


இதனைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விஜய் வர்மாவும், தமன்னாவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அந்த முத்த வீடியோ வைரலான பிறகு விஜய் வர்மாவும், தமன்னாவும் ஜோடியாகவே ஊர் சுற்ற தொடங்கினர். ஆனாலும் இவர்கள் இருவரும் தங்களது காதலை உறுதி செய்யவில்லை. 


இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு பேரின் பாதங்கள் மட்டும் தெரியும்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை நேற்றைய தினம் இன்ஸ்டா ஸ்டோரீஸில் போஸ்ட் செய்துள்ளார் விஜய் வர்மா. ஆனால் அவர் அந்த போஸ்ட்டில் யார் பெயரையும் குறிப்பிடவில்லை.


விஜய் வர்மா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, ஒன்று விஜய்யின் பாதம், மற்றொன்று தமன்னாவின் பாதம். தமன்னாவின் ஜாக்கெட் தெரிகிறது எனக் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது தானும், தமன்னாவும் காதலிப்பதை தான் விஜய் வர்மா இப்படி போஸ்ட் போட்டு உறுதி செய்திருக்கிறார். தமன்னாவும், விஜய் வர்மாவும் காதலர்கள் தான் என்பது உறுதியாகிவிட்டது எனவும் கூறியுள்ளனர்.


மேலும் போஸ்ட் போடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் தமன்னாவை திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement