• Sep 20 2024

பிக்பாஸ் சீசன் 6 இல் தாமரையின் கணவரா..? வெளியானது போட்டியாளர்களின் விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய 5 சீசன்களை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குவாராம்.

பிக் பாஸ் ஓடிடியை அடுத்து 6வது சீசனை சிம்பு தொகுத்து வழங்குவார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால் சிம்பு இல்லை கமல் தான் தொகுத்து வழங்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இந்த புது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.மேலும் போட்டியாளர்கள் தேர்வும் இப்போது தொடங்கி இருக்கிறது.

முந்தைய சீசன்களை போல இந்த சீசனில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் போட்டியாளராக யாரெல்லாம் வருவார்கள் என ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்

இந்நிலையில் சிம்புவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக போராட்டங்களை செய்து சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீநிதியை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே அப்படியொரு சர்ச்சையை ஸ்ரீநிதி கிளப்பினாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

அத்தோடு குக் வித் கோமாளி புகழ், அஸ்வின், கனி என மறுபடியும் குக் வித் கோமாளி பிரபலங்களின் பெயர்கள் இந்த சீசனிலும் அடிபட்டு வருகிறது. ஹீரோவான நிலையில், அஸ்வினுக்கு படங்கள் எடுபடாத நிலையில், மீண்டும் ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு பிக் பாஸில் பங்கேற்று ரசிகர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளாரா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் அல்டிமேட் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என விஜய் டிவியில் பிக்பாஸ் டீமுடனே ஐக்கியமாகி விட்ட தாமரைச் செல்வியின் கணவர் பார்த்தசாரதி அடுத்த சீசனில் பங்கேற்க போவதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ள நிலையில், கணவன் மனைவி இருவருமே மீடியாவில் பிரபலமாக பிளான் போட்டு வருகிறார்களாம்.

அத்தோடு கடந்த வாரம் நடைபெற்ற உல்டா ரவுண்டில் தாமரைச் செல்வி இம்சை அரசனாகவும் பார்த்தசாரதி ஹீரோயினாகவும் மாறி நடனம் ஆடி இருந்தனர். இந்த கொடுமையெல்லாம் பார்க்கணுமா? என ரசிகர்கள் இருவரையும் பங்கமாக கலாய்த்துத் தள்ளினர். தாமரை ரசிகர்கள் அவர்களது முயற்சியை பாராட்டினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement