• Sep 21 2024

அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்த தமிழ் நடிகர்-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். தனது இசையால் பல ரசிகர்களின் உள்ளங்களைக் கட்டிப் போட்ட இவர் ஆஸ்கர், கிராமி என சர்வதேச அளவில் விருதுகளை குவித்தவர்.

இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய இசை சேவையை தொடர்ந்து வருகிறார். இவரது இசையில் பல பரிணாமங்களை ரசிகர்களை அனுபவித்து வருகின்றனர். சர்வதேச அளவிலும் இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அதன்படி பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட முக்கிய திரைபடங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள ஏ ஆர் ரகுமான் இசை பணிகளை கவனித்துக் கொண்டே பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின்னணியில் சேர்க்கும் பணியையும் செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந் நிலையில் அமெரிக்காவில் இருக்கும் நடிகர் நெப்போலியன் ஏஆர் ரகுமான் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து நடிகர் நெப்போலியன் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஆஸ்கார் நாயகன் திரு AR Rahman அவர்களை நாங்கள் வசிக்கும் அமெரிக்காவில் Nashville ல் நேற்று இரவு (August 9th ) சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..! மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்..! பல ஆண்டுகளுக்குப் பின்னால் சந்திக்கிறேன்..!அதே அன்பான உபசரிப்பு…!
இன்று இரவு (August 10th) இங்கு நடைபெரும் இசை நிகழ்ச்சியில் எங்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தபோகிறார்..!
அவரது இசைப் பயணம் தொடர் வெற்றிபெற எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement