தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ஆனந்தி.இவர் பொறியாளன் படத்தில் அறிமுகமானாலும் கயல் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் . அதன்பிறகு சண்டி வீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, கமலி பிரம் நடுகாவேரி, ரூபாய், பண்டிகை, மன்னர் வகையறா உள்பட பல படங்களில் நடித்தார்.
மேலும் இவர் நடித்து முடித்துள்ள 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா' ஆகிய படங்கள் வெளிவர வேண்டியது இருக்கின்றது. இதற்கிடையே சாக்ரட்டீஸ் என்ற இணை இயக்குநரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
திருமணத்திற்கு பின்னர் தெலுங்கில் வெளியான ஸ்ரீதேவி சோடா செண்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தமிழில் ‛ஒயிட் ரோஸ்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆர்.கே.சுரேசும், ரூசோ என்ற புதுமுகமும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
அத்தோடு என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து தயாரிக்கிறார்.
எனினும் இப் படத்தைப் பற்றி இயக்குநர் ராஜசேகர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான படமாக உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- ராயப்பனை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்-செஞ்சிட்டா போச்சு என பதிவிட்ட இயக்குநர் அட்லி
- சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 8 இல் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்-இந்த வாரம் பட்டைய கிளப்ப போகுது
- நடிகர் சசிகுமாரின் கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- எப்படி இருக்கு என்று பாருங்க
- சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமை மாதிரி எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததில்லை-பிரபல தயாரிப்பாளர்
- சர்தார் திரைப்பட உரிமையைக் கைப் பற்றிய பிரபல தொலைக்காட்சி – முதலில் ஓடிடியில் தான் படம் ரிலீஸ் ஆகுமாம்
- தளபதி 67 திரைப்படம் எப்படி இருக்கும்? சூப்பர் பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்.!
- மஞ்சள் நிற சேலையில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்…ரீசன்ட் போட்டோசூட்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!