தமிழ் சினிமாவில் 80களில் பிரபல்யமான இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் T.ராஜேந்திரன். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே பேராதரவும் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் இப்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முதல் உடல்நல குறைவால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நடிகர் சிம்புவும் தனது அப்பா மருத்துவமனையில் அனுமதிப்பட்டது குறித்து அவரின் சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் குணமடைந்து இருப்பதால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின்மருத்துவமனைக்கு நேரில் சென்று T.ராஜேந்திரனின் உடல்நலம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!