• Sep 20 2024

திரையரங்குகளில் வெளியாகும் முன்னரே நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி. இவர் தற்பொழுது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்டதோடு ‘UA’ சான்றிதழ் பெற்று உள்ள நிலையில் மே 20 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என்பன நாளைய தினம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பார்த்து படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” திரைபடத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார்.

படத்தை பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவிநருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement