• Sep 20 2024

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் முக்கிய பிரமுகராக பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது .இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.அதே போல தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலினையும் இவ் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.


அந்த விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்.இந்த நிலையில் சோழர்களை மையமாக கொண்ட வரலாற்று படம் என்பதால் பொன்னியின் செல்வன் விழாவில் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிடுகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ் பாடல்கள் 6-ம் தேதி வெளியாகும் நிலையில் ஆந்திராவில் செப்டம்பர் 8-ம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement