• Sep 20 2024

அர்ஜுனுக்கு தமிழால் காத்திருந்த ஆபத்து... ஓடி வந்து தடுத்த ராகினி... இனி கோதை எடுக்கப்போகும் முடிவு..? 'Thamizhum Saraswathiyum' Promo Video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணமே இருக்கின்றது. 


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கோதையை ஏமாற்றி சொத்தை அபகரித்த அர்ஜுன் வீட்டிற்குத் தமிழ் போகின்றார். அங்கு சென்று அர்ஜுனின் சட்டையைப் பிடித்து இழுத்த தமிழ் "எங்க அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்தை ஏமாற்றலாம் என்று நினைக்கிறியாடா" எனக் கேட்கின்றார். உன் உயிரை எடுக்கிறேன் எனக்கூறி பூச்சாடியை தூக்கி அர்ஜுனின் தலை மேல் போடப் போகின்றார். அந்த சமயத்தில் ஓடி வந்து ராகினி தடுக்கின்றார். 


பின்னர் தமிழ் அர்ஜுனிடம் "அவங்க என் கூட இல்லை என்றாலும் அது என் குடும்பம், அவங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் வந்து நிப்பேன், கேள்வி கேட்பேன்" எனக் கூறிவிட்டு செல்கின்றார்.


இதனைத் தொடர்ந்து கோவிலில் இருக்கும் அம்மா அப்பாவிடம் சென்ற தமிழ் "என்ன இங்க உட்கார்ந்திட்டு இருக்கீங்க, என் நினைப்பே உங்களுக்கு வரலையா..? நான் என்ன உயிரோட இல்லையா..? எல்லாரும் கிளம்பி வாங்க போகலாம்" எனக்கூறி தன்னோடு வருமாறு அழைக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement