விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் தமிழும் சரஸ்வதியும் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.
கோதை தன்னுடைய ஆடரை உமாபதி பாதியிலேயே கான்ஷல் செய்ததால் நஷ்ட ஈடாக 20 லட்சம் தரவேண்டும் என்று கூறி புகார் அளித்திருந்தார். இதற்கு தமிழ் அசோஷியேசன் தலைவராக தமிழ் என்ன முடிவு எடுக்கப்போகின்றார் யாருக்கு சர்ப்போட் பண்ணப் போகின்றார் என எல்லோரும் காத்திருந்தனர்.
அதன்படி இருபக்கமும் தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர். பின்னர் பேசிய தமிழ் கோதை கம்பனி சட்டப்பூர்வமாக எல்லாம் வைத்திருந்தாலும் தமிழ் கம்பனியில் பொருளைத் திருடியதால் அது உமாபதி சேருடைய கம்பனிக்கு தான் நட்டமாக அமைந்தது. அதனால் கோதை கம்பனி திருடியது தப்பு உமாபதி எந்தப் பணமும் கட்டணும் என்று அவசியமில்லை என உமாபதிக்கு ஆதரவாக தமிழ் தீர்ப்பினை வழங்குகின்றார்.
இதனால் கடுப்பான கோதை கார்த்திக் அர்ஜுன் எல்லோரும் கிளம்பிச் செல்கின்றனர்.பின்னர் வீட்டுக்குச் சென்றதும் எல்லோரும் தமிழ் தன்னுடைய ஆடர் கான்ஷலாக போய்டும் என்று தான் இப்படி அவங்க பக்கம் தீர்ப்பை சொல்லிட்டான் என்று எல்லோரும் தமிழைத் திட்டுகின்றனர்.
அப்போது நடேசன் திருடினது எங்கட கம்பனி ஆட்கள் தானே அப்போ தப்பு எங்க மேலே தானே ஒரு திருடன் மற்றவங்களை பார்த்து திருடன் என்று சொல்லலாமா என்று சொல்லி தமிழ் சார்பாக பேசுகின்றார்.தொடர்ந்து இது தான் சமயம் என்று புது ப்ரோஜெக்ட் செய்வதற்கான ஆடர் வந்திருக்கு நீங்க ஓகே சொன்னால் செய்யலாம் என்று கோதையிடம் அர்ஜுன் காட்ட கோதை அர்ஜுனைத் திடடுகின்றார்.
எங்களால தான் எல்லாமே வந்திச்சு, என்ன முடிவு எடுக்கிறது என்றாலும் என்னிடம் கேட்டிட்டு எடுங்க நீங்களாவே ஏதும் பண்ணிடாதீங்க என திட்டி விட்டுச் செல்கின்றார். தொடர்ந்து தமிழ் வீட்டில் தமிழ் எடுத்த முடிவு சரியா என்று நமச்சியும் சரஸ்வதியும் தமிழிடம் கேட்க தமிழ் தப்பு கோதை கம்பனி மேல தான் உமாபதி சேர் அநியாயம் பண்ணல அவர் ஆடரை எனக்கு தரணும் என்றதுக்காக இதை பண்ணல அவர் பக்கம் உண்மை இருந்திச்சு அதனால தான் அவர் பக்கம் தீர்ப்பு வழங்கினேன் என்று சொல்கின்றார். இதனை உமாபதி மறைந்திருந்து கேட்டு விட்டு தமிழைப் பாராட்டுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.
Listen News!