• Nov 10 2024

அசீமை விட அதிக ஓட்டுக்களை பெற்ற தனம்-48 வது நாளில் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்படம்பர் 19ஆம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி செல்கின்றது.தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் 48வது நாள் எபிசோட் அதாவது கமலின் எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை பார்ப்போம்...

தனத்திடம் தலைவருக்கான போட்டிய பற்றி கமல் கேட்டு அதற்கு விளக்கம் கொடுத்திருந்தார்.அதன் பிறகு தனலட்சுமியை முதலாவதாக தனலட்சுமி சேர்வ் ஆனார்.

அதன் பிறகு அசீம் சேர்வ் ஆனார்.அதன் பிறகு கதிரவன் சேர்வ் ஆகார்.அதன் பிறகு நீதிமன்ற டாஸ்கில் அதிகம் பங்கு பறாத ஆக்களாக அதாவது அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படாத ஆக்களாக ரச்சிதா சிவிக் ராபர்ட் ஆயிஷா என எழும்பி நின்றார்கள்.அதன் பிறகு பலரும் அவர்கள் மேல் கேஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அப்புறம் ர இறுதியில், போட்டியாளர்கள் முன் தோன்றிய கமல்ஹாசன் தான் வழக்கை ஒன்றை முன்வைத்து பேசிய விஷயங்கள், அதிகம் வைரலாகி வருகிறது. நீதிமன்ற டாஸ்க்கின் போது பலரும் பாதுகாப்பாக போட்டி ஆடியதாக தெரிகிறது. தொடர்ந்து தங்கள் பிக்பாஸ் வீட்டில் வெளியேறாமல், சண்டைக்கும் போகாமல் தொடர்ந்து வீட்டில் நீடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடியதையும் கமல் குறிப்பிட்டார்.

மேலும் இது தொடர்பாக பேசி இருந்த கமல்ஹாசன், தனது வழக்காக ஒரு விஷயத்தை போட்டியாளர் முன்பு எடுத்துரைத்தார். "யாரு நல்லவன் அப்படிங்குறதுல்ல இந்த போட்டி. பிக் பாஸ் போட்டி அதுவல்ல. நீங்க என்ன நினைச்சிட்டு இருந்தீங்க?. இதுல பெரிய வில்லன்னா அசீம நினைச்சிட்டு இருந்தீங்க இல்லியா. அப்ப ஏன் இன்னும் இருக்காரு அவரு?" என கமல்ஹாசன் கூறியதும் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைத்தட்ட ஆரம்பித்தனர்.

தொடர்ந்து பேசும் கமல், "நல்லவனாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய பரிந்துரை. வல்லவனாக இருக்கணும்ங்குறது அவங்களோட (பார்வையாளர்கள்) எதிர்பார்ப்பு. இது இரண்டையுமே நீங்க பேலன்ஸ் பண்ணிட்டீங்கன்னா, நூறாவது நாள் அன்னைக்கு நம்ம பேச முடியும். அது யார் என்பது எனக்கு தெரியாது. நீங்க அனைவருமாக இருக்க வேண்டும் என்று உங்கள மாதிரி நானும் Safe Game விளையாடுறதா இருந்தா நீங்க அனைவருமே 100 நாள் இங்க இருக்கணும்ன்னு சொல்றது தான்.

இதுல பல பேர் விடுபட்டு போயிடுவீங்க. ஒருத்தர் தான் ஜெயிக்கப் போறீங்க. அத்தோடு எனக்கு இதுல யாரா இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாது. எனக்கு இதுல ஃபேவரைட் கிடையாது. ஆச்சரியங்கள் எனக்கு நிறைய காத்திருக்கு. நான் பலமுறை இவங்க தான் கடைசி வரை வருவாங்கன்னு நினைச்சா பாதியில அவங்க போயிடுவாங்க. எனக்கு ரொம்ப புடிச்சாலும் ஏதாவது தப்பு பண்ணி, பொறுமையிழந்து முன்னாடியே போயிருவாரு. அதிலிருந்து நான் பற்றற்று இருக்க கற்றுக் கொண்டேன் இந்த விளையாட்டுல. எப்படி போகுதுன்னு பாத்துட்டு இருக்கலாம்ன்னு. நான் முயற்சி பண்றது என்னன்னா, என்னுடைய இந்த பங்களிப்பும், உங்களுடைய பங்களிப்பும் அவர்களுக்கு (பார்வையாளர்களை காட்டியபடி) சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய வழக்கு" என கமல்ஹாசன் கூறினார்.

இவ்வாறுஇருக்கையில் இந்தவாரம் ரபார்ட் வெளியேறியுள்ளார் என நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement