ஜெயம் ரவி நடித்த 'பேராண்மை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா. அதனைத் தொடர்ந்து 'மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், விழித்திரு, காத்தாடி, காலக் கூத்து, இரட்டு, கபாலி, பரதேசி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளிலும் நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது பல விருதுகளையும் வென்றிருக்கின்றார். உதாரணமாக 'கபாலி, அரவான், பரதேசி' ஆகிய படங்களிற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினையும், 'இரட்டு' படத்திற்காக சிறந்த வில்லி நடிகைக்கான விருதினையும் பெற்றமையைக் குறிப்பிட முடியும். அத்தோடு 'கபாலி' என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நடித்ததிலிருந்து தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவராகவும் மாறியிருக்கின்றார்.
இவ்வாறாக எப்போதுமே பிஸியாக இருக்கின்ற நடிகை தன்ஷிகா சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர். அவ்வப்போது இன்ஸ்டாவில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
இதேபோன்று தற்போதும் ப்ளாக் அன்ட் யெல்லோ கலர் உடையில் போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றன.
பிற செய்திகள்
- ஹேக் செய்யப்பட்டதா சமந்தாவின் இன்ஸ்டா; விளக்கமளித்த மேனேஜர்
- விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? நரேஷ் பாபுவின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!
- சூர்யாவின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களை மாதவன் நிராகரித்தாரா…!
- ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் குட்டி ஆடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா..
- நடிகை தேவயானிக்கு ஃபேவரைட் டிஷ் இது தானாம்-இந்த இயக்குநருக்கும் அதில் பங்கு இருக்கின்றதா..?!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!