• Sep 20 2024

வெற்றி நடை போடும் 'டாடா'... வசூல் மழையில் நனையும் கவின்.. 3நாட்களில் இத்தனை கோடியா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3இன் மூலம் மக்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானவர் கவின். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரின் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து இருக்கின்றார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, அபிராபி, சாக்ஷி எனப் பலருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும். அந்நிகழ்ச்சியின் பின்னர் இவரின் வாழ்க்கையே மாறி விட்டது. அதாவது சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு மாறி விட்டார். 


அந்தவகையில் கவின் தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'டாடா'. கணேஷ் கே பாபு என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து இருக்கிறார். 


அபர்ணா தாஸ் ஏற்கனவே விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தாலும், இவர் தமிழில் ஹீரோயினாக நடித்திருக்கும் முதல் படம் இதுவாகும். இப்படமானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியானது.


இப்படத்தினுடைய முதல் ஷோவானது சற்று குறைவான ரசிகர்களுடன் தொடங்கினாலும், அதன்பின் திரையரங்கில் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 3நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்போது 3ஆம் நாளுக்கான வசூல் நிலவரம் வெளியாகி இருக்கின்றது.


அந்தவகையில் 'டாடா' படமானது 3நாட்களிலும் 6கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. 

Advertisement

Advertisement