கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகேயுள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பிறந்தவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்தார். எனினும் இதன் பின்னர் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை தேசியக் கட்சியான பாஜகவில் சேர்ந்து ஒரு அரசியல்வாதியாக மாறினார்.
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். மேலும் அரசியலில் தீவிரமாகவுள்ள அண்ணாமலை தற்போது சினிமா படத்தில் நடித்துள்ளார். 2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் பயோபிக் கன்னட மொழியில் படமாக்கப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தை கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். அத்தோடு ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் அரபி படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் அண்ணாமலை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் போஸ்டர்கள் வெளியானது.
இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டீசர் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசர் வெளியீடு குறித்த தேதி விரைவில் வெளியிடப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயக்குநர் ராஜ்குமார் கூறிய கதை பிடித்து போனதால் அண்ணாமலை இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக அண்ணாமலை ஒரு ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- விடுதலை திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- இரண்டு பாகமாக வெளியாகவுள்ளதாம்
- ‘கடைசியில் அவர் பூனை மற்றும் நாயுடன் தான் சாகப் போகின்றார்’- சமந்தா குறித்து டுவிட் போட்ட நபர்
- நடிகர் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க முடிவு செய்த ரூசோ பிரதர்ஸ்-அட சூப்பர் தகவலாச்சே
- ஹைதராபாத்திற்கு தனி விமானத்தில் சென்ற நடிகர் அஜித்- AK61 லேட்டஸ்ட் அப்டேட்!
- ‘ஒரு முடிவோட தான் இது எல்லாம் பண்ணுறீங்க போல’-ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விமர்சித்து வரும் ரசிகர்கள்
- மலேசியா மற்றும் துபாயின் புர்ஜ் கலிஃபா ஆகிய இடங்களில் நடக்கும் விக்ரம் படத்தின் ப்ரமோஷன்
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!