• Sep 20 2024

நீச்சல் வீரருக்கு பயிற்சி அளிக்கும் அண்ணாமலை- அரபி படத்தின் டீசர் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக இந்தியத்திரையுலகில் பல பிரபலங்கள் அறிமுகமாகி வருகின்றனர். சாதாரண மக்கள் தொடங்கி அரசியல் வாதிகள் ,தொழிலதிபர்கள் எனப் பலரும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அரபி. இந்தத்திரைப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முதல் வெளியாக இருந்தது.ஆனால் தொழில்நுட்ப காரணம் காரணமாக டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் பற்றி பேசிய அண்ணாமலை “கர்நாடகாவில் நீச்சல் வீரர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒரே ஒரு படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நான் நடித்து உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. டீசரில் அண்ணாமலை நீச்சல் வீரருக்கு பயிற்சி அளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement