கடந்த ஆண்டு நவம்பர் 25 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படம் தான் மாநாடு. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்ததோடு இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சுரேஷ் காமாட்டி தயாரிப்பில் வெளியான இப்படமானது 100 நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாது 100 கோடி கலெக்ஷனையும் கடந்துள்ளது.
தமிழில் வெளியான முதல் டைம் லுப்பை மையப்படுத்திய படமாக வெளிவந்தது. இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதால் இதை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யும் முயற்சி நடந்து வருகிறது. மாநாடு படத்தின் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட ரீமேக் உரிமைகளை சுரேஷ் டகுபதி வாங்கி உள்ளார்.
தற்போது லேட்டஸ்ட் வெளியாகிய தகவலின் படிஇப்படம் விரைவில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் ஹீரோவாக ராணா டகுபதி நடிப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் சிம்பு நடித்த ரோலில் நாக சைதன்யா தான் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது ராணா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநாடு தெலுங்கு ரீமேக்கையும் வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளதாக விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர். சிம்பு ரோலில் ராணா நடித்தால் என்ன, நாக சைதன்யா நடித்தால் என்ன, இல்லை வேறு யாரு நடித்தால் என்ன. எங்க தலைவன் எஸ்.ஜே.சூர்யா ரோலில் யாருப்பா நடிக்க போறது அதை முதலில் சொல்லுங்கள் என கேட்டு வருகிறார்கள்.
ஆனால் எஸ்.ஜே.சூர்யா நடித்த தனுஷ்கோடி ரோலில் அவர் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என படக்குழு நினைப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் எஸ்.ஜே.சூர்யா தான் தெலுங்கு ரீமேக்கிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- பாய் ஃபிரண்ட் உடன் படுக்கையறையில் பர்ஃபாமன்ஸ் செய்த ஒரு அடார் லவ் திரைப்பட நடிகை
- யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’ படத்திலிருந்து கிடைத்த லேட்டஸ்ட் அப்டேட்
- விக்ரம் படத்தில் நடித்த குட்டிக் குழந்தையை கமல் இப்படித் தான் நடிக்க வைத்தாரா?- சூப்பர் அட்டேட்டாக இருக்கே
- போதைப் பொருளை எடுத்துக் கொண்டால் தான் இசையமைக்கவே முடியும்- இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன்
- கமல் சார் மாதிரி பேசுங்க- மித்திரன் சொன்ன வார்த்தையைக் கேட்டு கடுப்பான கார்த்தி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!