• Nov 19 2024

ஹீரோயினை கொல்ல சொல்லிட்டாங்க- முதல் படத்தியே நடிகர் பாண்டியராஜனுக்கு உருவான பிரச்சினை- நடந்தது என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாநாயகனாக பலராலும் அறியப்படுபவர் நடிகர் பாண்டியராஜன். இயக்குநராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பாண்டியராஜன் போக போக நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு பெரும் கதாநாயகன் ஆனார்.பாண்டியராஜன் சினிமாவிற்கு வந்த புதிதில் இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.

ஒரு படத்தை நகைச்சுவையாகவும் அதே சமயம் விறு விறுப்பாகவும் இயக்க கற்றுக்கொண்டார் பாண்டியராஜன். அதன் விளைவாகதான் அவர் இயக்கிய ஆண்பாவம் திரைப்படம் பெரும் ஹிட் கொடுத்தது.ஆண் பாவம் படத்தில் பாண்டியராஜனும் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார். எனவே பாண்டியராஜன் இயக்கிய முதல் படம் ஆண்பாவம்தான் என பலரும் நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் ஆண்பாவம் அவரின் இரண்டாவது திரைப்படமாகும்.


ஆனால் அவரது முதல் திரைப்படம் கன்னிராசி என்கிற திரைப்படமாகும். இந்த படத்தில் பிரபு கதாநாயகனாகவும், ரேவதி கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையை பாண்டியராஜன் எழுதும்போது அதில் கதாநாயகி க்ளைமேக்ஸில் இறப்பது போல எழுதியிருந்தார்.

படத்தின் தயாரிப்பாளருக்கும் அந்த க்ளைமேக்ஸ் பிடித்திருந்தது. ஆனால் பிறகு பாண்டியராஜனுக்கு கதாநாயகியை கொல்ல விருப்பமில்லை. எனவே கதையை மாற்றி அமைத்தார். அதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர், பாண்டியராஜனை சந்தித்து “படத்தில் கதாநாயகி இறப்பதாக கூறிதான் பல இடங்களில் பணம் வாங்கியுள்ளேன். அதனால் தயவு செய்து க்ளைமேக்ஸில் கதாநாயகியை கொன்று விடுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.


முதல் படத்திலேயே இப்படியான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி இருந்தது என ஒரு பேட்டியில் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement