தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக இருந்தாலும் மாஸ் இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'மாநகரம்' என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து கைதி ,மாஸ்டர் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
தொடர்ந்து கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகிய நாளிலிருந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதோடு உலகம் முழுவதும் ரூ.275 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரபாஸ் ஆகியோரிடம் லோகேஷ் கதை சொல்லியுள்ள நிலையில் தற்போது அல்லு அர்ஜுனிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை அடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், அதற்கு அடுத்ததாகவே அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- இப்படி ஒரு வீட்டில் தான் மறைந்த நடிகர் விவேக் ஆரம்பத்தில் இருந்தாரா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்
- மூத்த கலைஞர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாமனிதன் படக்குழு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!